தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு. திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், செங்கல் பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும், தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு, அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பு எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025