தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த 144 தடையை கண்காணித்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க இந்திய்ய இராணுவமும் களத்தில் இறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த ஊரடங்கின் போது பொதுமக்களுக்கு ஏதேனும் அவசர தேவைகள் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு சீர்மிகு காவல்துறை தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை தெரிவித்து இருக்கிறது. அந்த அறிவிப்பில், சென்னையில் அவசர தேவைகளுக்காக பயணம் செய்வோருக்காக கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டுள்ளது என்றும், இதில், திருமணம், மருத்துவம் இறப்பு போன்றவற்றிற்காக வெளியூர் செல்வோர் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தொடர்பு எண்கள்: 7530001100 என்ற எண்ணில் வாட்ஸ ஆப் மற்றும் எஸ். எம். எஸ் மற்றும் gcpcorano@2020 gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். பயணத்திற்கு அனுமதி சீட்டு பெற விண்ணப்பிப்போர் கோரிக்கை கடித்தத்துடன் அடையாள ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும் என காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…