நீண்ட நாட்களாக ஒரே நிலையில் பெட்ரோல்,டீசல் விலை!

சென்னை:இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.40 ரூபாய்க்கும்,ஒரு லிட்டர் டீசல் விலை 91.43 ரூபாய்க்கும் 44 வது நாளாக மாற்றமின்றி ஒரே விலையில் விற்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
பொதுவாக,பெட்ரோல்,டீசல் விலையேற்றம் என்பது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சுமையாக கருதப்படுகிறது.எனினும்,தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரே விலையில் நீடித்து வருகின்றன.
இந்நிலையில்,சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.44 வது நாளான இன்றும் மாற்றமில்லாமல் ஒரே விலையிலேயே பெட்ரோல்,டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025