முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தடை விதிக்க கோரி வழக்கு: மனுதாரருக்கு ஐந்து ஆண்டுகள் தடை..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறநிலைதுறை ஆலோசனை கூட்டங்களுக்கு தலைமை வகிக்க தடைவிதிக்க கோரியவர் 5 ஆண்டுகள் பொதுநல வழக்குகளை தொடர தடை.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாத்திகர் என்பதால் அறநிலையத் துறை ஆலோசனைக் கூட்டங்களுக்கு தலைமை வகிக்க தடை விதிக்க வேண்டும். இந்து மதத்தைப் பின்பற்றுவதாக இந்து கடவுள் முன் உறுதிமொழி எடுத்த பிறகே இக்கூட்டங்களுக்குத் தலைமை வகிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, மனுதாரர் 5 ஆண்டுகளுக்கு பொதுநல வழக்குகள் தாக்கல் செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025