சென்னையில் இருந்து புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மற்றும் மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க 4 நாள் பயணமாக சென்னையில் இருந்து புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னையில் இருந்து புறப்பட்டுள்ள முதலமைச்சர் திருச்சி சென்று அங்கிருந்து இரவு நாகை மாவட்டத்துக்கு செல்கிறார் என கூறப்படுகிறது.
அதன்படி, திருக்குவளையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பின்னர் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்று திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். முதலமைச்சரின் கள ஆய்வு திட்டத்தின் கீழ் ஆக.26ம் தேதி 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
இதில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் நாளை மறுநாள் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார். இதையடுத்து, ஆக.27ல் திருத்துறைப்பூண்டியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மீண்டும் சென்னை திரும்புகிறார் முதலமைச்சர்.