யார் அந்த தியாகி? “நொந்து போய் நூடுல்ஸ் ஆகிய அதிமுகவினர்” மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!
நொந்து போய் நூடுல்ஸ் ஆகி இருக்கும் அதிமுக தொண்டர்கள் தான் தியாகிகள் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று வருகிறது. இதில், எம்எல்ஏக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு வருகையில், அதிமுக எம்எல்ஏக்கள் “யார் அந்த சார்?’ எனும் வாசகம் அடங்கிய பேட்ஜ் அணிந்து வந்தனர். மேலும், சபாநாயகரிடம் முன் அனுமதி பெறாமல் இது தொடர்பான பதாகைகளையும் பேரவைக்குள் கொண்டு வந்ததாக தெரிகிறது.
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றது குறித்து விவாதிக்க வேண்டும் என சட்டப்பேரவைக்குள் அதிமுக எம்எல்ஏக்கள் தொடர் அமளியில் ஈடுப்பட்டதாக தெரிகிறது. மேலும், பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற பதாகைகளை கொண்டு வர வேண்டும் என்றால் சபாநாயகரிடம் முன் அனுமதி பெற வேண்டும். அதனை மீறி அதிமுகவினர் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அதிமுகவினர் பேரவையில் இருந்த வெளியேற்றவும், பதாகைகளை ஏந்திய 7 அதிமுக எம்எல்ஏக்களை இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்து பேரவை நிகழ்வுகளில் இன்று ஒருநாள் கலந்து கொள்ள முடியது என்றும் கூறி அவர்களை ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இந்த உத்தரவை அடுத்து அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதனை அடுத்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுகவின் பேரவையில் ஒரு பிரச்னையை கிளப்பி, அதன் பிறகு விவாதம் நடத்தி , சபாநாயகர் அது தொடர்பாக பதில் அளித்தும் அதில் திருப்தி அடையாத சூழலில் கையில் ஒரு பதாகை ஏந்தினர். அதில், “யார் அந்த தியாகி?” என எழுதப்பட்டிருந்தது.
எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதா வழிநடத்தியா அதிமுகவை அதன் பிறகு பொறுப்பேற்று இப்பொது எதிர்க்கட்சியாக அமர்ந்து இருக்கும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர், அதிமுகவில் இருந்து தாங்கள் சிக்கியிருந்த வழக்குகளில் இருந்து தப்பித்துக்கொள்ள டெல்லி போய் யார் காளில் விழுந்தார்கள் என்று தெரியும். அதனால், நொந்து போய் நூடுல்ஸ் ஆகி இருக்கும் அதிமுக தொண்டர்கள் தான் தியாகிகள். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலமைச்சராகுவதற்கு அன்றைக்கு உதவிய அம்மையாரை ஏமாற்றியவர் தான் தியாகியாக இருக்கிறார். என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.