அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை என்ன.? முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை.!

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக அரசு நிதி நிலை அறிக்கையில் அறிவித்த திட்டங்கள் தற்போது எந்த நிலைப்பாட்டில் உள்ளன என்பது குறித்து பல்வேறு துறை அமைச்சர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆலோசனை கூட்ட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பொன்முடி, சக்கரபாணி, பெரிய கருப்பன் , கீதா ஜீவன், சாமிநாதன் , உள்ளிட்டோர் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், குறிப்பாக மகளிருக்கு உரிமை தொகை உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்தும், அதன் தற்போதைய நிலை குறித்தும் அதனை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்தும் அந்தந்த துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025