Tamilnadu CM MK Stalin Speech in Bharathithasan University [File Image]
திருச்சியை மையமாக கொண்டுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி , உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், என் வாழ்வும், வளமும் மங்காதா தமிழ் தான் என்று சங்கே முழங்கு என கூறிய பாரதிதாசன் பெயர் கொண்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வது எனக்கு பெருமை. உயர்கல்வியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. PhD படிப்பில் சிறந்த மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது,
ஒரே மேடையில் பிரதமர் மோடி – முதல்வர் மு.க.ஸ்டாலின்.! தொடங்கியது பட்டமளிப்பு விழா.!
தமிழகத்தில் முன்பு ஆட்சி செய்த நீதிக்கட்சி கொண்டு வந்த திட்டம் தான் தமிழகத்தில் கல்வியில் பெரும் புரட்சி ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து வந்த திராவிட அரசு அனைவருக்கும் கல்லூரி , அனைவருக்கும் ஆராய்ச்சி கல்வி, இன்னார் தான் படிக்கணும் என்பதில் இருந்து நிலை மாற்றி அனைவரும் படிக்க வேண்டும் என நடவடிக்கை எடுத்துள்ளோம். மாணவர்கள் படிப்பை மனதில் கொண்டு நான் முதல்வன் திட்டம், அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஆட்சிபணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நலன் கருதி மதுரையில் பிரமாண்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 29 லட்சம் மாணவர்கள், 32 ஆயிரம் ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியில் பயன்பெற்றுள்ளனர். இதன் மூலம் ஒரு வருடத்தில் மட்டும் 1.40 லட்சம் பேர் வேலை பெற்றுள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம், 2021-2022, 2022-2023, 2023-2024 ஆகிய 3 கல்வி ஆண்டுகளில் 28,749 மாணவர்கள் பயப்பெற்றுளளனர். இந்த கல்வி திட்டங்களுக்காக ஆண்டுக்கு 482 கோடி ரூபாயை அரசு செலவு செய்கிறது. இந்திய அளவில் பாலிடெக்னீக் கல்லூரிகள் கொண்ட அளவில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
இந்திய அளவில் 100 கல்லூரிகளின் தரவரிசையில் தமிழகத்தில் இருந்து 25 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய அளவில் 100 பல்கலைகழகங்களில் தமிழத்தில் இருந்து 22 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்திய அளவில் 100 பொறியியல் தரவரிசை பட்டியலில் 15 தமிழக பொறியியல் கல்லூரிகள் இடம்பெற்றுள்ன என தமிழக உயர்கல்வித்துறை வளர்ச்சி பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார் .
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…