[Image source : India Today]
கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, நாளை பெங்களூரு செல்கிறார் முதலமைச்சர்.
கர்நாடக மாநில புதிய முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமாரையும் கட்சி தலைமை தேர்ந்தெடுத்து அறிவித்திருந்தது. அதன்படி, பெங்களூரு காண்டிவரா மைதானத்தில் நாளை மறுநாள் கர்நாடக முதல்வர், துணை முதல்வர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
இந்த சமயத்தில், பெங்களூருவில் வரும் 20ம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள சித்தராமையா தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தனர்.
இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, நாளை பெங்களூரு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை இரவு பெங்களூரு செல்கிறார். நாளை மாலை பெங்களூரு புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை மறுதினம் நடக்க உள்ள கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…