தஞ்சை, நாகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்…

Published by
பாலா கலியமூர்த்தி

MK Stalin: மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று தஞ்சை மற்றும் நாகையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரை 34 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் வலுவான கூட்டணியாக இருக்கும் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு என முதல் கட்சியாக நிறைவு செய்தது. அதன்படி, திமுக நேரடியாக 21 தொகுதிகளில் களமிறங்க உள்ள நிலையில், காங்கிரஸ் 10, இரு கம்யூனிஸ்ட்கள், விசிக கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளிலும், மதிமுக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட ஒருசில தலா ஓரு தொகுதிகள் என கூட்டணி கட்சிகளும் 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, திமுக உட்பட அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அந்தவகையில், மக்களவை  தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான அட்டவணையும் வெளியிடப்பட்டது. அதன்படி, நேற்று திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கினார்.

அப்போது, பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேரு, திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ உள்ளிட்டோரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிலையில், இன்று தஞ்சை, நாகை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்

அதன்படி, தஞ்சையில் இன்று காலை சாலையில் நடந்து சென்று திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து வாக்கு சேகரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று மாலை தஞ்சையில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு வேட்பளர்களை அறிமுகம் செய்துவைத்து உரையாற்றுகிறார். இதனைத்தொடர்ந்து, நாகப்பட்டினம் தொகுதிகளிலும், நாளை மறுநாள் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி தொகுதிகளிலும் முதல்வர் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

Recent Posts

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

1 hour ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 hour ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

2 hours ago

களத்தில் இறங்கிய இந்திய விமானப்படை! உ.பி அதிவிரைவு சாலையில் தீவிர பயிற்சி!

லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…

2 hours ago

”பலரின் தூக்கத்தை கலைக்கும் காட்சி இது” – கேரள விழிஞ்சம் துறைமுகம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி.!

திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…

3 hours ago

கங்குவா வசூலை பீட் செய்ததா ‘ரெட்ரோ’.? முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…

3 hours ago