Tamilnadu CM MK Stalin [FIle Image]
இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா (அக்டோபர் 30) அவர் பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் நடைபெற உள்ளது. நேற்று முன்தினமே பசும்பொன்னில் குருபூஜை விழா நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இன்று காலை பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் மரியாதை செலுத்த உள்ளார். அதற்காக , நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். அதன் பிறகு மதுரையில் சர்கியூஸ்ட் ஹவுசில் தங்கி இருந்தார்.
இன்று காலை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு , அதன் பிறகு மதுரை ஆவின் சந்திப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார். இதனை தொடர்ந்து, மதுரை தெப்பக்குளம் அருகே மருது சகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அதன் பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்ல உள்ளார். அங்கு தமிழக அரசு சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார்.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…