நாளை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களோடு முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை.!

அடுத்த மாதம் ஊரடங்கு தளர்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களோடு வருகின்ற நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முதலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அந்த வகையில், அடுத்த மாதம் 1 முதல் டிசம்பர் 31 -ஆம் தேதி வரை பின்பற்றக் கூடிய புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.
அதன்படி, வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு, கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், அடுத்த மாத ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களோடு நாளை முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025