10 பேருக்கு ரூ.10 லட்சத்துடன் “கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது” வழங்கிய முதல்வர்!

Published by
Edison

சென்னை:2010 முதல் 2019 வரை கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விருதாளர்கள் 10 பேருக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலை மற்றும் கலைஞர் சிலையுடன் விருதும்,தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. 

மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் 2010 முதல் 2019 வரையிலான “கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளுக்கான” விருதாளர்கள் பட்டியல் கடந்த ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதனையடுத்து,தமிழறிஞர்கள் மற்றும் தமிழ்நாட்டு பெருமக்களின் முன்னிலையில் மாநில அளவிலான தமிழ்மொழி சார்ந்த விழாவில் கூடிய விரைவில் இவர்களுக்கு விருது வழங்கப்படும் என்று அரசால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,2010 முதல் 2019 வரை கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விருதாளர்களுக்கு இன்று (ஜனவரி 22 ஆம் தேதியன்று) அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வரும் விழாவில்  தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும்,அவர்களுக்கு விருதுடன் தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றுடன்,கலைஞர் கருணாநிதி அவர்களின் சிறிய அளவிலான சிலையும் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி,விருது பெற்றவர்களின் பெயர்கள்:

  1. 2010- முனைவர் வீ.எஸ்.இராஜம், (Former Senior Lecturer, Department of South Asia Regional Studies, University of Pennsylvania).
  2. 2011 – பேராசிரியர் பொன், கோதண்டராமன் (மேனாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை).
  3. 2012- பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி (மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்).
  4. 2013 – பேராசிரியர் ப. மருதநாயகம் (மேனாள்இயக்குநர், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம்,மேனாள் பதிவாளர்,புதுவைப் பல்கலைக்கழகம்).
  5. 2014 – பேராசிரியர் கு. மோகனராசு (மேனாள் பேராசிரியர்&தலைவர். திருக்குறள்ஆய்வுமையம், சென்னைப்பல்கலைக்கழகம், சென்னை).
  6. 2015- பேராசிரியர் மறைமலை இலக்குவனார்(மேனாள் தமிழ்ப்பேராசிரியர். மாநிலக்கல்லூரி).
  7. 2016 – பேராசிரியர் கா. ராஜன் (மேனாள் பேராசிரியர்,வரலாற்றுத் துறை, புதுவைப் பல்கலைக்கழகம்).
  8. 2017 – பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ், Professor and Head of the Institute of Indology and Tamil Studies, Cologne University,Germany).
  9. 2018 கவிஞர் ஈரோடு தமிழன்பன் (மேனாள் தமிழ்ப் பேராசிரியர்,புதுக் கல்லூரி, சென்னை).
  10. 2019 -பேராசிரியர் கு.சிவமணி (மேனாள்முதல்வர், கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் & திருவள்ளுவர் கல்லூரி,நெல்லை).

Recent Posts

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன? நள்ளிரவு பயங்கரவாதிகளின் தூக்கம் துளைத்த தரமான சம்பவம்.!

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன? நள்ளிரவு பயங்கரவாதிகளின் தூக்கம் துளைத்த தரமான சம்பவம்.!

காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…

6 minutes ago

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…

36 minutes ago

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

4 hours ago

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

5 hours ago