நாகை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு நடத்த முதல்வர் சென்றுள்ளார். அப்போது, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசு செயல்படுத்திய பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் கொரோனா தடுப்பு கநடவடிக்கைகள் குறித்தும் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன்பின் கடலூர் மாவட்டத்தில் ரூ.57.7 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிலையில், தற்போது நாகை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு நடத்த முதல்வர் சென்றுள்ளார். அப்போது, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதனையடுத்து, நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், நாளொன்றுக்கு 70,000 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன என்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். வீடு வீடாகச் சென்று காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. வருவாய், காவல், உள்ளாட்சி துறைகள் இணைந்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை செய்கிறது. கொரோனா காலத்திலும் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் வேலைவாய்ப்பு நன்றாக இருக்கிறது என்று கூறி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…
லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…
திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…