நீட் தேர்வை நடத்தலாம் என முதலமைச்சர் சொல்லி இருப்பது பச்சைத் துரோகம் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டுக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு தாருங்கள்’ என்று அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று சம்பிரதாயமாக கடிதம் எழுதியதும், ‘கொரோனா முடிந்த பிறகு நீட் தேர்வு நடத்தலாம்’ என்று முதலமைச்சர் திரு.பழனிசாமி இன்று சொல்லி இருப்பதும் அதிமுக அரசின் பச்சைத் துரோகங்கள்.
தமிழகத்தில் நிரந்தர விலக்கு கோரி சட்ட முன்வடிவுகளை மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டு, அதற்கு மாறாக முதலமைச்சர் பேசுவது விசித்திரம்.சட்ட முன்வடிவுகளை மத்திய அரசு குப்பைக்கூடையில் எறிந்துவிட்டது; எஜமானர்களை எதிர்த்துக் கேட்கும் தெம்பில்லாத அதிமுக அரசு கமுக்கமாக கைவிட்டுவிட்டது.
தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் – செல்வங்கள் அனிதா, சுபஸ்ரீயின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் இரக்கமற்ற செயல் இது.சட்டமன்றத்தைக் கூட்டி, ‘நீட் தேர்வை நடத்த மாட்டோம் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கையை நடத்துவோம்’ என்று பிரகடனப்படுத்த வேண்டும் – நாம் கேட்பது தற்காலிக விலக்கு அல்ல! அடித்தட்டு மக்களுக்கான நிரந்தரப் பாதுகாப்பு.அரசியல் காரணங்களுக்காக அதிமுக அரசு நழுவிப் போக நினைத்தாலும் தி.மு.க அதை அனுமதிக்கவே அனுமதிக்காது.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…