முதலாமாண்டு மாணவர்களுக்கு வரும் 23 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் – அண்ணா பல்கலைக்கழகம்!

முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு வரும் 23 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நோய்க்கட்டுப்பாடு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் வரும் 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, பள்ளி, கல்லூரிகள் செயல்பட தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் திறக்கும் முயற்சியில் தீவிரமடைந்துள்ளது.
இந்தநிலையில், பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு நவ. 23 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன் AICTE, முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகளை டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடதக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!
July 5, 2025
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025