இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கானது, நாளையுடன் முடிவடைய இருந்தது .ஆனால் நாடு முழுவதும் முழுஅடைப்பு மேலும் இரண்டு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டது என மத்திய அரசு அறிவித்தது. மே 17 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.இதற்கு இடையில் மே 3 க்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் 17 பேர் கொண்ட வல்லுநர் குழு தனது 2ம் கட்ட அறிக்கையை சமர்ப்பித்தது.
இந்நிலையில், இன்று ( மே மாதம் 2ஆம் தேதி ) தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்வு அளிக்கப்படுமா என்று ஆலோசிக்கபட உள்ளது.ஏற்கனவே பிரதமர் மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…