இதுதான் தமிழ்நாடு., கல்வி நம் உயிரினும் மேலானது! முதலமைச்சரின் உருக்கமான ‘இரு’ பதிவுகள்!

வள்ளியூர் சுனில் குமார், பூந்தமல்லி அனந்தன் ஆகியோரை குறிப்பிட்டு கல்விதான் நம் உயிரினும் மேலானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

TN CM MK Stalin

சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே உயிரிழந்து விட்டார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதில் சுனில் குமார் அருகில் உள்ள பள்ளி ஒன்றில் பன்னிரெண்டாம் பகுப்பு படிக்கிறார்.

இதயநோயால் அவதிப்பட்டு வந்த சுபலட்சுமி நேற்று அதிகாலை உயிரிழந்தார். தன் தாய் இறந்த சோக நிகழ்வை நெஞ்சில் சுமந்து நேற்று நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவன் தேர்வு எழுதினார். தன் தாயின் உடலை வணங்கி விட்டு தேர்வு எழுதி பின்னர் தன் தாயின் இறுதி சடங்கில் பங்கேற்று இருந்தார் மாணவர் சுனில் குமார்.

அடுத்து, நேற்று முதன் முறையாக பார்வை மாற்று திறனாளி மாணவர் ஆனந்தன் என்பவர் கணினி மூலம் தேர்வு எழுதியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு பள்ளியில் பயின்று வந்த ஆனந்தன் 12ஆம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளார்.

மேற்கண்ட இரண்டு மாணவர்களின் கல்வி ஆர்வத்தையும் அதன் தேவையையும் அறிந்து நிகழ்ந்த உருக்கமான இந்நிகழ்வுகளை குறிப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், ” இதுதான் தமிழ்ச் சமூகம். கல்விதான் நம் உயிரினும் மேலானது.” என்றும்,

“பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால், சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!” என பாவேந்தர் பாரதிதாசன் பாடிய சங்கநாதம் எனும் கவிதை தொகுதிப்பில் இருந்து வரிகளை குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்