அதிமுக முடிவு செய்து அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.நீண்ட நாட்களாக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு எடுப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் பல கட்ட ஆலோசனைக்கு பின்னர் பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும். தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும் என்று கூறினார்.முருகனை தொடர்ந்து பாஜகவின் தலைவர்களான வானதி சீனிவாசன்,அண்ணாமலை,ஹெச்.ராஜா உள்ளிட்டோர் இதே கருத்தை கூறி வருகின்றனர்.ஏற்கனவே அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களது பேச்சுக்கள் அதிமுக -பாஜக கூட்டணி இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு அதிமுகவினரும் பதில் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது.அதிமுக முடிவு செய்து அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி. இதுவே அதிமுகவின் முடிவு. கூட்டணி வேறு, கொள்கை வேறு. கூட்டணியில் இருப்பதை பா.ஜ.க.மறுக்கவில்லை. எங்கள் முடிவையே பா.ஜ.க.பின்பற்றுவார்கள் என நம்பிக்கை உள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…