கோவையை சேர்ந்த ரங்கநாதன் எனும் இளைஞர் ஒருவர் சிறார் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பதிவிட்டதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி வளையபாளையம் பகுதியை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தொடர்ச்சியாக சிறுவர் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தொலைபேசியில் பதிவிறக்கம் செய்துள்ளார்.
இதனை சென்னை சைபர் க்ரைம் போலீசார் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். அதன் பிறகு இவர் குறித்த தகவலை கருத்தம்பட்டி போலீஸ்க்கு கொடுத்துள்ளனர். அப்பொழுது ரங்கநாதனை நேரில் சென்று விசாரித்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
அதாவது அவர் போனை ஆராய்ந்ததில் இவர் தரவிறக்கம் செய்யும் சிறார் ஆபாச வீடியோக்களை வாட்ஸாப் குழுக்கள் மூலம் பலருக்கு பகிர்ந்துள்ளதையும், முக நூலில் போலி கணக்குகள் தொடக்கி அதிலும் வீடியோக்கள் பகிர்ந்துள்ளதையும் கண்டறிந்து உள்ளனர்.
பின் ரங்கநாதனை போக்சோ மற்றும் தகவல் தொழில் நுட்பபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த கருமத்தம்பட்டி காவல்துறையினர், அவரை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்துள்ளனர்.
மேலும், அவர் பகிர்ந்த வாட்ஸாப் குழுக்களில் இருக்கும் நபர்கள் தொடர்பாகவும், இந்த வீடியோக்களை அவர்கள் யாருக்கெல்லாம் பகிர்ந்துள்ளார்கள் என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…