கூட்டத்தொடரில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு, மருத்துவர் சாந்தா உள்ளிட்ட 22 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவை நாளை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கூட்டத்தொடர் குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
அதில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் இன்று பேரவையில் முன்னாள் அமைச்சா் துரைக்கண்ணு, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவா் சாந்தா ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அத்துடன் பேரவை ஒத்திவைக்கப்படும் என அறிவிக்கபப்ட்டது.
மேலும், நாளை ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் முன்மொழியப் பெற்று அதன்மீது விவாதம் நடைபெறும். 5-ஆம் தேதி அன்று விவாதம் தொடர்ந்து பதிலுரையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூடிய தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு, மருத்துவர் சாந்தா, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 22 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவை நாளை ஒத்திவைக்கப்பட்டது.
இதனால், 3-வது நாளாக நாளை காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…