கோவை விமான நிலையத்திற்குள் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் வந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகி..!

கோவை விமான நிலையத்திற்குள் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் வந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகி.
இன்று காலை கோவை விமான நிலைய வளாகத்திற்கு வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணி ஒருவர் கொண்டுவந்த கைப்பைக்குள் துப்பாக்கி மற்றும் ஏழு தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அதிகாரிகள், அந்த நபரை சிஐஎஸ்எப் வீர்ரகளிடம் ஒப்படைத்தனர். அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அவர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பகுதியை சேர்ந்த கே.எஸ்.பி.தங்கல் என்பதும், அவர் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இவர் கோவையில் இருந்து பெங்களூர் சென்று அங்கிருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025