எம்.பி. வசந்தகுமாரின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பு – முதல்வர் பழனிசாமி இரங்கல்.
கொரோனாவால் வைரசால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், ஏழை எளிய மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அரும்பணிகள் ஆற்றிய குமரி தொகுதி எம்.பி. எச்.வசந்தகுமார் அவர்களின் மறைவு காங்கிரஸ் கட்சியினருக்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பு. எச். வசந்தகுமார் அவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று கூறியுள்ளார். இவரது மறைவு வேதனையளிக்கிறது என்றும் பொதுவாழ்வில் ஈடுபட்டு மக்களின் அன்பை பெற்றவர். கடின உழைப்பின் மூலம் வாழ்வில் உயர்ந்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…