மாணவி ஒருவர் ஆங்கில பாடல் ஒன்றைப் பாட கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் மற்றும் மாணவிகளுடன் ராகுல்காந்தி உற்சாகமாக நடனம் ஆடினார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழக அரசியல் களம் சற்று பரபரப்பாக தான் காணப்படுகிறது, இந்நிலையில், ஒவ்வொரு கட்சி தலைவர்களும் தற்போது தேர்தல் முன்னேற்பாடு பணிகளிலும், தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் கடந்த இரு நாட்களாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது முளகுமூடு பகுதியில் உள்ள பள்ளி மாணவர் ஒருவர் நடனம் ஆட முடியுமா என்று ராகுல் காந்தியிடம் கேட்டார். அதற்கு உடனடியாக சரி என்று பதிலளித்து ராகுல்காந்தி நண்பர்கள் யாராவது மேடைக்கு வாருங்கள் என்று உற்சாகப்படுத்தினார்.
இதனை அடுத்து மூன்று பேர் மேடைக்கு வந்த நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இவரையும் தன்னுடன் நடனமாட அழைத்தார். பின் மாணவி ஒருவர் ஆங்கில பாடல் ஒன்றைப் பாட கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் மற்றும் மாணவிகளுடன் ராகுல்காந்தி உற்சாகமாக நடனம் ஆடினார்.
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…