நேற்று திருச்சியில் மாநில இளைஞர் காங்கிரஸ் தரப்பில் விழுதுகளை நோக்க்கி என்ற தலைப்பில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் அகில இந்திய தலைமை செயலாளர் ஜெமி மேக்தா மற்றும் மாநில இளைஞரணி தலைவர் அசன் மௌலானா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் பிரேம், மாவட்ட செயல் தலைவர் ரமேஷ் சந்திரன் என பெயர் வாசிக்கப்பட்டது. இதில் கோபமடைந்த ரமேஷ் சந்திரன், இளைஞர் காங்கிரஸ் தலைவரிடம், ‘ பிரேம் நடவடிக்கை சரியில்லை என்றுதான், என்னை மாவட்ட தலைவராக நியமித்தீர்கள். தற்போது மீண்டும் பிரேமை தலைவர் என்றும், 4 மாதமாக தலைவர் பொறுப்பில் இருக்கும் என்னை செயல் தலைவர் என்றும் கூறுகிறீர்கள்.’ என வாதிட்டார்.
அப்போது பிரேம் மற்றும் அவரது ஆதரவாளர்களும் குறிக்கீட்டு மாநில இளைஞரணி தலைவர் அசன் மௌலானாவிடம் முறையிட்டனர். விழா மேடையில் இருதரப்பினரும் தலைவரிடம் முறையிட்டதால், கைகலப்பு உண்டானது. இதனால் அந்த இடம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. பின்பு காங்கிரஸ் அகில இந்திய தலைமை செயலாளர் ஜெமி மேக்தா மற்றும் மாநில இளைஞரணி தலைவர் அசன் மௌலானா ஆகியோர் நிர்வாகிகளை சமாதானம் செய்து பிரச்னையை தீர்த்து கேக் வெட்டி காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பிறந்தநாளை கொண்டாடினார்.
அதனை அடுத்து இன்று காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் நிர்வாகிகளின் பெயர் வாசிப்பின் போது ஒரு பிரமுகரின் பெயரை வாசிக்கவில்லை என கூறப்படுகிறது. அப்போது அந்த பிரமுகரின் ஆதரவாளர்கள் கூச்சல் எழுப்பியுள்ளனர். அதனை தொடர்ந்து அந்த கூட்டத்தில் இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…