சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினர் போட்டி போட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பொன்னேரி (தனி), வேளச்சேரி, தென்காசி, ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி), ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீபெரும்புதூர் (தனி), சோளிங்கர், குளச்சல் உள்ளிட்ட 25 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடயுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், காங்கிரஸ் எம்.பி விஷ்ணுபிரசாத் அவரது ஆதரவாளர்களுடன் சத்தியமூர்த்தி பவனில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். முக்கிய நிர்வாகிகள் யாரிடமும் ஆலோசனை செய்யாமல் வேட்பாளர்களைத் தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்பிவைத்ததாகவும், கட்சியில் இருந்து விலகி மீண்டும் இணைந்தவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு தர இருப்பதாக கூறி விஷ்ணுபிரசாத் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், விஷ்ணு பிரசாத்துக்கு எதிராக கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…