thirunavukarasu [Imagesource : Hindu]
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 23வது கூட்டம் டெல்லியில் இன்று டெல்லியில் நடைபெற்றது. தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாள் சந்தீப் சக்சேனா மற்றும் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், காவிரியில் இருந்து 15 நாட்கள் 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்திருந்த நிலையில், செப்.12-ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு, வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 10 நாட்களுக்கு 24 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் அவர்கள், காவிரி விவகாரத்தில் திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் போராடும். காவிரி நதி நீர் பிரச்னை தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது எல்லாம் வரும். தமிழகம் மற்றும் கர்நாடகா மாநில அரசுகள் சட்டப்படா செயலாற்ற வேண்டும். உச்சநீதிமன்றம், காவிரி ஆணையம் மூலம் சட்டப்படி தீர்வு காண வேண்டும் என வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…