ஒரே ஒரு தன்னார்வலர் மூலம் சென்னையில் 52 பேருக்கு கொரோனா உறுதி.!

சென்னை, திருவல்லிக்கேணியில் தன்னார்வலர் ஒருவர் மூலமாக 52 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது என கொரோனா தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே இரு மடங்கிற்கும் மேலாக சென்னையில் கொரோனா தொற்று அதிகமாகியுள்ளது.
அதனால், சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் அதிதீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில், கொரோனா தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறுகையில், சென்னை, திருவல்லிக்கேணியில் தன்னார்வலர் ஒருவர் மூலமாக 52 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது என தெரிவித்தார். மேலும், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பவர் தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மேலும், தன்னார்வலர்கள் 10 நாட்களுக்கு ஒருமுறை தாமாகவே முன்வந்து சோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025