தமிழகத்தில் மீண்டும் 2000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் மேலும் 2,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,77,279 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்பொழுது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில், நீண்ட நாட்களுக்கு பின் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,000-ஐ கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் 84,759 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் 2,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 8,77,279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 775 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும், 1,241 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 8,52,463 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 9 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,659 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, மருத்துவமனையில் 12,157 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதத்திற்குப் பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 2000-ஐ தாண்டியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
கோப்பை இந்தியாவுக்கு தான்…ஹர்திக் பாண்டியா சம்பவம் பண்ண போறாரு! மைக்கல் கிளார்க் பேச்சு!
February 16, 2025
அஞ்சு கட்சி அமாவாசை செந்தில் பாலாஜி! பதிலடி கொடுத்து கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார்!
February 16, 2025