எனக்கு கிடைக்காதவன் யாருக்கும் கிடைக்க கூடாது…! காதலனை கொல்ல காதலி எடுத்த விபரீத முடிவு …!

காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் ஆனதால், ஆசிட் ஊற்றி கொன்ற காதலி.
உத்திரபிரதேசத்தில் ஆக்ராவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், சோணம் என்ற இளம்பெண்ணும் தேவேந்திரர் என்ற இளைஞனும் ஆய்வகத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து தேவேந்திரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த காதலி சோனம் ஆத்திரத்தில் தனக்கு கிடைக்காத ஒருவன் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று அவரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், தேவேந்திரனிடம் திடீரென சோனம் என்னுடைய வீட்டில் மின்விசிறி பழுதாகிவிட்டது. வந்து அதை சரி செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
இதையடுத்து அவரும் சோனம் வீட்டிற்கு சென்று அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சோனம் மறைத்து வைத்திருந்த ஆசீட்டை அவர்மீது வீசியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே தேவேந்திரர் கதறி அழுதுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்தனர். தேவேந்திரரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் தேவேந்திரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார.
காதலன் மீது ஆசிட் வீசும் போது, சோனம் உடலிலும் அங்கங்கு ஆசிட் பட்டதால் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025