கொரோனவால் தமிழகத்தில் இன்று 11 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 184ஆக அதிகரித்தது.
தமிழகத்தில் இன்று புதிதாய் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 15,770 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 184ஆக அதிகரித்தது. இது, மக்களிடையே சற்று அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
July 30, 2025