இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 24,898 பேருக்கு கொரோனா..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 24,898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக 24,898 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 12,97,500 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 6,678 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,70,596 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் இன்று 195 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,974 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 21,546 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 11,51,058 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,52,130 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,35,45,987 ஆக உள்ளது. மேலும், தற்போது 1,31,468 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!
May 23, 2025
அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!
May 23, 2025