தமிழகத்தில் இன்று 562 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 8,54,554 ஆக அதிகரிப்பு.!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக 562 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 8,54,554 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 243 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 2,36,728 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,517 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து இன்று 560 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 8,38,085 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தற்போது 3,952 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025