தமிழகத்தில் இன்று மேலும் 5,595 பேருக்கு கொரோனா.!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,595 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,08,885 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,278 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,70,025 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் இன்று 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,653 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 5,603 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 5,52,938 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.மேலும், தற்போது 46,294 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025