கொரோனா தொற்று : மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சிபிஐ அலுவலகம் மூடல்!

மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சிபிஐ அலுவலகம் மூடல்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து இவ்வழக்கு சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 22-ந்தேதி காவலர்களிடம் விசாரணை நடத்திய குழுவில் உள்ள அதிகாரிகளில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விசாரணை குழுவில் இருந்த மேலும் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சிபிஐ அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்படவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிபிஐ அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025