மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கிய கொரோனா நிவாரண நிதி ரூ.133 கோடியை முழுமையாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு.
கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக் கோரி மூன்று அமைப்புகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண தொகையாக ரூ.133 கோடி தமிழக அரசு ஒதுக்கப்பட்ட நிலையில், 6 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு, 64 கோடியே 42 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மிதமுள்ளவர்களுக்கு நிவாரண உதவி வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தமிழக அரசு ஒதுக்கப்பட்ட ரூ.133 கோடியில், ரூ.64.42 கோடி தரப்பட்ட நிலையில், மீதமுள்ள ரூ.73 கோடி நிலை என்ன? என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து வழக்கை தள்ளிவைத்தனர்.
இந்நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கிய கொரோனா நிவாரண நிதி ரூ.133 கோடியை முழுமையாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிவாரணம் குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கை முழுமையாக இல்லை என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
மேலும், ஒதுக்கீடு செய்த நிவாரண தொகையை மாற்று திறனாளிகளுக்கு தர ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கால் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி தரகோரிய வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் என்பது குறிப்பிடப்படுகிறது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…