“அனைத்து போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை”- காவல் ஆணையர்!

அனைத்து போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. அந்தவகையில், சென்னை எழும்பூரில் உள்ள காவலர்கள் குடியிருப்பில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கலந்துகொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தடுப்பு விதிகளை மக்க பின்பற்றவேண்டும் என்று வேண்டுகோள் விதித்தார். தொடர்ந்து பேசிய அவர், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காவலர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து காவல்களுக்கு கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025