தமிழகத்தில் இன்று மேலும் 477 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், கடந்த 3 தினங்களாக 500க்கு கீழ் பாதிப்பு குறைந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனாவால் 10,108 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 10,585 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 332 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 6,271 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 939 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 3,538 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா கண்டறியப்பட்ட 477 பேரில் 93 பேர் வெளிமாநிலம் சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து இன்று ஒரே நாளில் மட்டும் 10,535 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 3,13,639 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 477 பேரில் ஆண்கள் 303 பேர், பெண்கள் 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10,585 பேரில் ஆண்கள் 6,945 பேரும், பெண்கள் 3,637 பேரும் மற்றும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா வார்டில் 6,970 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் கடந்த 3 தினங்களாக 500க்கு கீழ் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…
சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீடு உள்பட 5 இடங்களில் ED அதிகாரிகள் சோதனை…