தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளதால் சத்தியமங்கலம் பூ சந்தையும் தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று முதல் மல்லிகைப்பூ செடிகளில் இருந்து பூக்கள் பறிக்கும் பணி நடைபெறவில்லை. இதனால் பூ நடவு செய்த விவசாயிகளுக்கு கடும் நட்டமடைந்துள்ளது. ஒரு சில விவசாயிகள் மலர்கள் பறிக்கப்படாததால் செடிகளை மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். தற்போது குளிர்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கியுள்ளதால் மல்லிகை பூ உற்பத்தி நாளொன்றுக்கு 20 டன்னாக அதிகரித்துள்ளது.தற்போது மல்லிகை பூவின் விலை குறைந்த பட்சம் ஒரு கிலோ ரூ.250க்கு விற்றாலும் 20 டன் என கணக்கிட்டால் சுமார் ரூ.50 லட்சம் இழப்பு ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக மல்லிகைப்பூ மட்டுமின்றி முல்லை, காக்கடா, செண்டு, கோழிக்கொண்டை, சம்பங்கி என பல்வேறு மலர்கள் இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ளதால் பல லட்சக்கணக்கான ரூபாய் வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது.
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…