எல்லை மீறுவது கூட்டணிக்கு ஆபத்து.! பாஜக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது – ஹெச்.ராஜா

Published by
பாலா கலியமூர்த்தி

எல்லை மீறி போவது கூட்டணிக்குள் பிரச்னையை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜுவும், ஜெயக்குமாரும் பேசுவது சரியல்ல என்று ஹெச். ராஜா பேட்டி.

கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி ஊரவலத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனால், அதற்கு பாஜக மற்றும் இந்து முன்னணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை அரசு பெரிதும் பெரிதுபடுத்தாமல் இருந்தது. இதனால், பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா விமர்சனம் செய்தார். அதாவது, கர்நாடகா மாநிலத்தில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி வழங்கியது என்றும் ஆண்மையுள்ள அரசு என பதிவிட்டிருந்தார். இது அதிமுக அமைச்சர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவை உரசி பார்க்க கூடாது என்றும் ஹெச். ராஜா சொன்ன வார்த்தைகள் அவருக்கு தான் பொருந்தும் எனவும் தெரிவித்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டின் முன் கடந்த காலத்தில் காத்துக்கிடந்தது யார் என எல்லாருக்கும் தெரியும் என ஹெச். ராஜாவுக்கு பதிலடி கொடுத்தார். இதுபோன்று, அமைச்சர் செல்லூர் ராஜுவும் அவரை விமர்சித்து பேசியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது மதுரையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஹெச். ராஜா, எல்லை மீறி போவது கூட்டணிக்குள் பிரச்னையை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜுவும், ஜெயக்குமாரும் பேசுவது சரியல்ல என்றும் கூறியுள்ளார். மேலும், தொடர்ந்து தான் தமிழக அரசை விமர்சித்ததே இல்லை. பாஜக இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என்றும் நாடு முழுவதும் இருப்பது போல தமிழகத்திலும் பாஜகவின் நடவடிக்கைகள் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

57 minutes ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

1 hour ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

2 hours ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

2 hours ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

3 hours ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

3 hours ago