ஊரடங்கு மீறல்: 3,60,566 பேர் கைது, 2,19,248 வாகனங்கள் பறிமுதல்.!

ஊரடங்கை மீறி வெளியிற் சுற்றிய நபர்களின் 2,19,248 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1.36 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 3,60,566 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர். வெளியே சுற்றிய நபர்களின் 2,19,248 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1.36 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இதுவரை 2,45,097 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அந்தந்த எல்லை கட்டுப்பட்டு காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டு, பின்னர் உரிய ஆவணங்களை ஆராய்ந்து வாகனங்களை சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதுவும் சில நாட்களுக்கு பிறகே இதுபோன்று திரும்ப வழங்கப்படுகிறது. இந்த நடவடிக்கை சென்னையில் எடுக்கப்பட்டு திரும்ப வாகனங்களில் சொந்த நபரிடம் ஒபைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025