அவதூறு வழக்கு ..! விஜயகாந்தை எச்சரித்த நீதிமன்றம்

Published by
Venu
  • அவதூறு வழக்கில் விஜயகாந்த் மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.
  • விஜயகாந்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு தேனியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பங்கேற்று பேசினார் .ஆனால், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது.எனவே தமிழக அரசு சார்பாக தேனி நீதிமன்றத்தில் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இதனால் இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று விஜயகாந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.எனவே  இதை எதிர்த்து விஜயகாந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் வந்தது.இந்த விசாரணையில்,  விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மேல் முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.

ஆனால் நீதிமன்றம், மனுவில் கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி விட்டு, தற்போது வழக்கை வாபஸ் பெற அனுமதி கேட்பது, நீதிமன்ற நேரத்தை வீணடிப்பது போன்றது என்பதால் அபராதம் விதிக்கலாம் எச்சரிக்கை விடுத்தது.எதிர்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் பேசிய பேச்சுக்கள் அவதூறானவையே  என்று தெரிவித்தனர் .மேலும் எதிர்கட்சி எப்படி செயல்பட வேண்டும் என்று  துணை குடியரசு தலைவர்  கூறியுள்ளதையும் மேற்கோள்கட்டியது நீதிமன்றம். இறுதியாக நீதிமன்றம்  வழக்கை வாபஸ் பெற அனுமதித்து,  தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.

 

Published by
Venu

Recent Posts

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

3 hours ago

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

4 hours ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

5 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

6 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

7 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

8 hours ago