அனைத்து மண்டலங்களிலும் பல் மருத்துவமனை தொடங்கப்படும்..! மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்..

சென்னையில் மேயர் பிரியா தலைமையில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய ராதாகிருஷ்ணன், அனைத்து மண்டலங்களிலும் பல் மருத்துவமனை தொடங்கப்படும் என்று கூறியுள்ளார். சென்னையில் தற்போது 16 இடங்களில் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இனிவரும் காலங்களில் அனைத்து மண்டலங்களிலும் பல் மருத்துவமனை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.