ஒரு சிலிண்டர் விலை ரூ.4500 முதல் ரூ.5000 வரை என திண்டுக்கல் சீனிவாசன் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
வனத்துறை அமைச்சரும், திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளருமான திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் தொகுதியில் மீண்டும் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இதனால், கடந்த 13-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சாரத்தில் உளறி வருகிறார்.
இந்நிலையில், தற்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சாரத்தில் பேசும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையில் வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது. இந்த திட்டத்தை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் ஒரு சிலிண்டர் ரூ.4500 முதல் ரூ.5000 வரை எனவும் 6 சிலிண்டர் வருடத்திற்கு இலவசமாக தருவதாக முதலமைச்சர் அறிவித்ததாக கூறினார்.
ஒரு சிலிண்டர் விலை தற்போது ரூ.800 -க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் ரூ.5,000 என உளறியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன், திண்டுக்கல் சீனிவாசன் சோலார் அடுப்பு திட்டத்தை பற்றி பேசியபோது பெட்ரோல் ஊற்றாமல் அடுப்பை பயன்படுத்தலாம் என கூறினர்.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் போது பிரதமர் மோடியின் பேரன் ராகுல்காந்தி என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…