முன்னதாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையடுத்து நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில்,திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அவர்கள் உடனடியாக ராஜினமா செய்ய வேண்டும் என முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில்,கூட்டணி கட்சிகளுக்கு பதவியை விட்டுக்கொடுக்காமல் இருந்த காரணத்தினால் திமுக நிர்வாகிகள் 7 பேர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சரும்,திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அதன்படி,சின்னசேலம் பேரூராட்சி செயலர் செந்தில்குமார்,தருமபுரி மல்லாபுரம் பேரூராட்சி செயலர் உதயகுமார்,ஆனந்த்,ரகுமான் சான்,மோகன்குமார் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும்,தஞ்சை வேப்பத்தூர் பேரூராட்சி திமுக துணைச்செயலாளர் ராமச்சந்திரன்,ஒன்றிய இளைஞரணி நிர்வாகி ராஜதுரை உள்ளிட்டோர்களும் கட்சியினர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதால் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…