மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலையப்பட்டி சார்ந்தவர் ராகவானந்தம். இவரது மனைவி ரஞ்சிதா. இவர்களுக்கு பார்க்கவி மற்றும் யுவராஜ் என இரு குழந்தைகள் இருந்தனர். ராகவானந்தம் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு அவரின் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரு குழந்தைகளும் எலி மருந்து மருந்துகள் கேக்கை சாப்பிட்டு உயிரிழந்தனர்.
வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த ராகவானந்தம் தன் குழந்தைகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கீழவளவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தன் குழந்தைகளை தாய் ரஞ்சிதா எலி மருந்து கலந்த கேக்கை கொடுத்து கொன்று விட்டு , யாரோ எலி மருந்து கலந்து வைத்து இருந்த கேக்கை இருவரும் சாப்பிட்டு உயிரிழந்ததாக நாடகமாடினார்.
இதைத்தொடர்ந்து கீழவளவு காவல்துறையினர் ரஞ்சிதா மற்றும் அவரது கள்ளக்காதலன் கல்யாண குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைகளை தாய் விஷம் கொடுத்து கொன்றது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் ரஞ்சிதா கைது செய்யப்பட்டுள்ளார் .
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…