அத்திவரதர் தரிசன நேரத்தை மாற்றம் செய்த மாவட்ட நிர்வாகம்!

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதரை தரிசனம் செய்ய பக்தர்கள் சாலை ஓரங்களில் தங்கி அதிகாலை வசந்த மண்டபம் திறந்ததும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இதுவரை அத்திவரதரை தரிசனம் செய்ய 43 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வந்து உள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறி உள்ளது. இன்று ஆடி பூரம் என்பதால் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
இதனால் பிற்பகல் 2 மணிக்கு கோபுர வாசல் மூடப்படும் எனவும் அத்திவரதர் வைபவம் மாலை 5 மணி உடன் மூடப்பட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும். மீண்டும் அத்திவரதர் தரிசனம் 8 மணிக்கு தொடங்கி 10 மணிவரை நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் கூறி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025