AIADMK chief Edappadi K Palaniswami. [FILE IMAGE]
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜனவரி 9 ஆம் தேதி அன்று காலை 10:30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கான கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக ஐடி விங்க் நிர்வாகிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில், கட்சி உறுப்பினர்களை தயார்படுத்துதல், புதிய வாக்காளர்களை ஈர்ப்பது, சமூக வலைதளங்களில் செயல்பாடுகளை மேம்படுத்துதல் என பல்வேறு விஷயங்கள் குறித்து அறிவுறுத்தல் வழங்கியதாக கூறப்பட்டது.
தரக்குறைவான விமர்சனம் வேண்டாம்! உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் – இபிஎஸ்
இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, சமூக வலைத்தளங்களில் செயல்படும் அதிமுகவினர் தரைக்குறைவாக விமர்சனம் செய்ய வேண்டாம். அதிமுக ஐடி விங் எனது நேரடி கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்றார்.
சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாகப் பணியாற்றிய டாக்டர் சலாஹுத்தீன் முகமது அயூப் (84) மே 24, 2025 அன்று…
அஹமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வந்த சென்னை அணி புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்துடன் வெளியேறியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் அமலாக்கத்துறை தொடர்ச்சியாக பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், புதுக்கோட்டையில் மே 24-அன்று…
அமெரிக்கா : பிஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ, கிறிஸ்டியானோ ரொனால்டோ அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை…
டெல்லி : ஆண்டுதோறும் நாட்டின் நிதி நிர்வாகம், வளர்ச்சி திட்ட இலக்குகள் குறித்து ஆலோசிக்க நிதி ஆயோக் கூட்டம் என்பது நடைபெற்று…
சென்னை : மத்திய மகாராஷ்டிராவில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. அடுத்த 24…