தீபாவளி போனஸ் – போக்குவரத்துத்துறை ஊழியர்கள் தமிழக போக்குவரத்து கழகத்திற்கு கடிதம்..!
ஒவ்வொரு வருடமும் தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு, போக்குவரத்துத்துறை சார்பில் தீபவளி போனஸ் வழங்குவது வழக்கம்.
அந்த வகையில், போக்குவரத்துத்துறைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் தீபாவளி போனஸ் 20% வழங்கிட வேண்டுமென கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஆண்டுகளில் கொரோனாவை காரணம் காண்பித்து 20 சதவீத போனசை 10 சதவீதமாக குறைத்ததை இந்த ஆண்டு செய்யக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், போனஸ் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தற்பொழுது அழைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன் பணமாக ரூ. 10,000 வழங்க வேண்டும் என போக்குவரத்து துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கடந்த வருடம் கொரோனா காலத்தில், 20 சதவீத போனசை 10 சதவீதமாக குறைத்து போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கிய நிலையில், இந்த ஆண்டு குறைத்து வழங்காமல், 20 சதவிகித பொன்னாசை வழங்க வேண்டும் என டெஹ்ரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.