கடந்த பிப்ரவரி 14-ம் தேதி 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக தாக்கல் செய்த பின்னர் தமிழக சட்டப்பேரவையை பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால். அதன்படி இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது வேளாண் மண்டல தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என திமுக துணை தலைவர் துரைமுருகன் வலியுறுத்தினார்.
இதையடுத்து சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது குறுக்கிட்டு பேசிய துரைமுருகன், வேதாந்தா நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் டெல்டா மாவட்டங்களில் எந்த பணிகளையும் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது குறுக்கிட்ட முதலவர் எடப்பாடி பழனிச்சாமி, இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த துரைமுருகன், நீங்கள் திட்டத்தை கொண்டுவருவீர்கள்.! நாங்கள் வலியுறுத்த வேண்டுமா.? என கேள்வி எழுப்பினார். பின்னர் சட்டப்பேரவையில் மத்திய அரசிடம் நீங்கள்தான் நெருக்கமாக இருக்கிறீர்கள் என திமுக, அதிமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…